மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்! நாட்டை சீரழிக்கிறார்கள்..கொந்தளித்த ஜேர்மன் அமைச்சர்


பெண்கள் மீதான தலிபான் கட்டுப்பாடுகளுக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இஸ்லாமியத்தை தீவிரமாக கடைபிடிப்பதாக கூறும் தலிபான் அரசு, பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க தடை விதித்தது.

அத்துடன் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுமாறு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் பணிபுரியவும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்! நாட்டை சீரழிக்கிறார்கள்..கொந்தளித்த ஜேர்மன் அமைச்சர் | German Minister Annalena Condemnation Taliban Curb

கண்டனங்களை எதிர்கொள்ளும் தலிபான் அரசு

ஆப்கானிஸ்தானின் பெண்கள் மீதான இதுபோன்ற கட்டுப்பாடுகள் உலகளவில் எதிர்வினைகளை பெற்று வருகிறது.

பல தலைவர்கள் தலிபான் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக், தலிபான் அரசின் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அமைச்சரின் கண்டனம்

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தலிபான்கள் மனிதாபிமான உதவியை தங்கள் பெண் வெறுப்பிற்காக விளையாடுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

அவர்கள் மற்றொரு அடிப்படை உரிமையை மக்கள் தொகையில் பாதியை கொள்ளையடித்து, மனிதாபிமான கொள்கைகளை மீறுகிறார்கள் மற்றும் மக்களின் முக்கிய தேவைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள்.

பெண்கள் மற்றும் இளம் பெண்களை வேலையில் இருந்தும், கல்வியில் இருந்தும், பொது வாழ்க்கையில் இருந்தும் ஒதுக்குபவர்கள் தங்கள் நாட்டை மட்டும் சீரழிக்கவில்லை.

பாலின அடிப்படையிலான துன்புறுத்தலும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். சர்வதேச சமூகத்தின் வலுவான பதிலுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதை தலிபான் அரசு தடை செய்தது, உலகளாவிய சீற்றத்தையும் சில ஆப்கானிய நகரங்களில் எதிர்ப்புகளை தூண்டியது. அதன் பின்னர் ஒரு வாரத்தில் வேலைக்கு செல்லும் இந்த தடை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.  

அன்னலெனா பேர்பாக்/Annalena Baerbock

@Image: AP/dpa/picture alliance



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.