500 உயிர்களை பலிகொண்ட போராட்டம்! சிறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி..பரபரப்பு குற்றச்சாட்டு


ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கைதாகியுள்ள பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


ஹிஜாப் போராட்டம்

மாஷா அமினி என்ற இளம் உயிரிழந்த விவகாரம் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டமாக ஈரானில் உருவெடுத்தது.

நாட்டையே உலுக்கிய இந்த போராட்டத்தில் அரசின் இரும்பு கர செயல்பாட்டினால் 500க்கும் அதிகமானோர் பலியாகினர்.

மேலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

500 உயிர்களை பலிகொண்ட போராட்டம்! சிறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி..பரபரப்பு குற்றச்சாட்டு | Women Protesters Sexually Assaulted In Iran Prison

@Christian Mang/Reuters

சிறைக்கைதி பெண்களுக்கு துன்புறுத்தல்

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனித உரிமை ஆர்வலரான நர்கீஸ் முகமதி என்பவர் சர்வதேச ஊடகங்களுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது புகார் கடிதத்தில், ‘சிறையில் உள்ள பெண்கள் காவலர்களால் கற்பழிக்கப்படுகிறார்கள். அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்’ என அவர் கூறியுள்ளார்.

500 உயிர்களை பலிகொண்ட போராட்டம்! சிறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி..பரபரப்பு குற்றச்சாட்டு | Women Protesters Sexually Assaulted In Iran Prison

yougovamerica 

ஆனால், ஈரான் அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை ஈரான் நீதிமன்றம் வழங்கி வருவதும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதனை கண்டித்து வருவதும் நடந்து வருகிறது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.