`ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு..?!’ – பிரேக்அப் ஆன 15 நாள்களில் தற்கொலை செய்த டிவி நடிகை

மும்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பு டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது மதிய உணவு இடைவெளியில் சக நடிகரும், காதலனுமான சீசம் மொகமத் கான் மேக்அப் அறையில் இருந்த வாஷ் ரூம்-ல் தற்கொலை செய்து கொண்டார். இத்தற்கொலை டிவி துறையில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸாரின் விசாரணையில், துனிஷாவும், சீசன் மொகமத் கானும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த 15 நாள்களுக்கு முன்புதான் பிரேக் அப் செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக மொகமத் கான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மொகமத் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது.

அதனால் தான் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டதாக துனிஷாவின் மாமா தெரிவித்துள்ளார். இது குறித்து பவன் சர்மா கூறுகையில், `துனிஷாவின் தற்கொலையால் குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். துனிஷா உயிரோடு இல்லை என்பதை எங்களால் நம்பமுடியவில்லை. துனிஷா தனது தாயாருடன் வசித்து வந்தார். போலீஸார் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். துனிஷாவுடன் தொடர்பில் இருக்கும்போதே மொகமத் கான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இதனால் துனிஷா மன அழுத்தத்திற்கு ஆளானார். டிசம்பர் 16-ம் தேதி மொகமத் கான் தன்னை ஏமாற்றுவது துனிஷாவிற்கு தெரிய வந்தது. துனிஷாவின் தாயாரும் மொகமத் கானிடம் பேசினார். ஏன் நெருக்கமாக பழகிவிட்டு திடீரென விலகிச்செல்கிறாய் என்று கேட்டார்’ என்று தெரிவித்தார்.

துனிஷா தற்கொலை செய்த போது கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை என்று தெரிய வந்தது. அவரின் உடல் நாளைதான் தகனம் செய்யப்பட இருக்கிறது. போலீஸார் இத்தற்கொலை தொடர்பாக இதுவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர்.

மொகமத் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சந்திரகாந்த் ஜாதவ் கூறுகையில், தூக்கில் தொங்கியதால்தான் துனிஷா இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெளிவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.

‘லவ் ஜிகாத்’ – மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ

இந்நிலையில் மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ. ராம் கதம் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில்,” கடந்த சில நாள்களுக்கு முன்தான் துனிஷா சர்மா – சகீன் மொகமத் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். துனிஷாவின் மரணத்திற்கு லவ் ஜிகாத் காரணமாக இருக்கலாம்.

பாஜக எம்.எல்.ஏ ராம் கதம்

துனிஷாவின் குடும்பத்தினருக்கு 100 சதவிகிதம் நீதி கிடைக்க வேண்டும். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? அதன் பின்னால் லவ் ஜிகாத் இருக்கிறதா என விசாரணை முடிவில் தான் தெரியும். சதிகாரர்கள் யார்? சகீன் கான் பின்னால் இருக்கும் அமைப்பு எது எனக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்” என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.