திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலையில் கொதிகலனில் ஏற்பட்ட பழுதால் 2000 டன் கரும்புகள் அரவைக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள கூட்டுறவு சக்கரை ஆலையானது இந்த பருவத்திற்கான கரும்பு அரவை பணியானது கடந்த 22-ம் தேதி பூஜை செய்து அரவை பணி துவங்குவதற்காக கொதிக்கலனில் தீ மூட்டப்பட்டது. ஆனால், பணி துவங்கிய அன்றே கொதிகலன் பழுது ஏற்பட்டது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2 டன் கரும்புகள் தேக்கமடைந்துள்ளது. இந்த கரும்புகள் வெயில் மற்றும் மழையிலும் காய்வதால் கருப்புகள் எடை குறைவு ஏற்படும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும், கரும்பிகளை ஏற்றி வந்த உரிமையாளர்கள் போதிய அடிப்படை வசதி இல்லை மற்றும் உரிய பாதுகாப்பும் என்று கூறி உடனே இந்த கொதிக்கலனை உடனடியாக சீரமைத்து, கரும்பை அரவை பணிக்கு எடுத்து கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.