மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ் ஷா(30). இவர் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் பங்கேற்றார். பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனே சூரஜ் உள்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல் அதிகாரி குருதேவ் கூறுகையில், விபத்தில் ஒரு சுற்றுலா பயணி பலியானார். பலியானவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார்கள். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பாராகிளைடிங் விமானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூரஜ் சஞ்சய் ஷா இறந்த இமாச்சல பிரதேசத்தில், டேன்டெம் பாராகிளைடிங்கின் போது பல இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாகச விளையாட்டு நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஜனவரியில் மாநில உயர்நீதிமன்றம் தடை செய்யப்பட்டன.
பெங்களுருவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிர் பில்லிங் பாராகிளைடிங் தளம் அருகே விபத்தில் சிக்கி இறந்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.