சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து 18 ஆயிரம் பேர் அடுத்த கட்ட உடல் தகுதித் தேர்வுக்காக அழைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி மிழகம் முழுவதும் 295 […]
