உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உருமாறிய பி.எப் 7 வகை கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் பி.எப் 7 வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் பி.எப் 7 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என டி.எம்.சி.ஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு மற்றும் கொரோனா பரவல் குறித்தான விழிப்புணர்வை ஒலிபெருக்கி மூலம் கோயம்பேடு பகுதியில் அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர்.
மேலும் தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அங்கன்வாடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சென்னையில் உள்ள கடைகளிலும் மக்கள் கூடும் பகுதிகளிலும் மாஸ்க் அணிவது அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.