புதுடில்லி: பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (டிச.,27) சந்தித்து பேசினார்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (டிச.,27) சந்தித்து பேசினார்.இதையடுத்து பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் நினைவுப்பரிசு வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement