TNPSC குரூப் 4: ஆயிரக்கணக்கில் சேர்க்கப்பட்ட காலி பணியிடங்கள்! இன்னும் அதிகரிக்குமாம்?!

குரூப் 4 தேர்வில் 2500 காலி பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதில், ஏற்கெனவே 7301 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
image
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதையடுத்து குரூப் 4 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் 2023 ஜனவரி மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும் என தெரியவருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.