சென்னை: மதுபானங்கள் கொள்முதல் தொடர்பாக பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது? எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது? என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6ம் தேதி அறிக்கையை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
