மும்பை: கர்நாடகாவில் இருக்கும் பெல்ஹாம் உட்பட 5 நகரங்கள், 865 கிராமங்களை மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மஹாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த தீர்மானத்தில், பெல்காம் எனப்படும் பெலகாவி, கார்வார், பிடார், நிப்பானி, பால்கி நகரங்கள் மற்றும் எல்லையோரத்தில் உள்ள மராத்தி பேசும் 865 கிராமங்களை மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும். அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். எல்லையோர மராத்தி பேசும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என்பதில் மஹாராஷ்டிரா அரசு உறுதியாக இருக்கிறது.
எல்லை பிரச்னை தொடர்பாக கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர்கள் இடையே மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த வேண்டும். மராத்திக்கு எதிராக கர்நாடகாவின் நிலைபாட்டிற்கு கண்டனம் எனக்கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement