ஜனவரி முதல் “சாரதி திறன் மதிப்பெண்” முறை

வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகளினால் இடம்பெறும் தவறுகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் “சாரதி திறன் மதிப்பெண் ” “Driver Skill Score System”  முறையை அடுத்த மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகளினால் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் தவறுக்கு புதிய முறையில் புள்ளி வழங்குதல் மற்றும் அதற்கான தண்டனை வழங்குவதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கான ஆரம்ப நடைமுறைகள் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சாரதிகளுக்கான இந்த மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான இந்த முயற்சிக்கு அமைவாக வாகன தவறுகளுக்காக 20 புள்ளிகளை பெறுவோரின் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.

இதற்கமைவாக அவ்வாறானோர் ரத்து செய்யப்படும் காலத்திற்கு பின்னர் ஆரம்பம் முதல் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் வரையில் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது என்னவெனில், ஒரு வருடத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்வதாகும். நாம் தற்பொழுது இதற்கு சம்பந்தப்பட்ட ஆரம்ப நடைமுறைகளை வகுத்து அமைச்சரவை ஆவணத்தை தயாரித்து ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக்க முடியும். இதனை ஜனவரி மாதத்தில் நடைமுறைபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.