'தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள்' – ஜே.பி.நட்டா முன்னிலையில் அண்ணாமலை உறுதி!

“ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம் நிஜமான வேஷம்,” என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சாடி உள்ளார்.

கோவையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்ட விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

2024 தேர்தலில் பாஜகவின் இரண்டு வெற்றி வேட்பாளர்களை கோவை, நீலகிரி தொகுதியில் கொடுக்க இருக்கிறார்கள் என்பதற்கு அச்சாரமாக இந்த விழா இருக்கிறது. தி.மு.க., எப்போதுமே தமிழுக்கும், தாழ் நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்பட்டு வந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம். கொங்கு பகுதியில் திமுக எதை எடுத்துச் செல்லலாம் என நினைக்கிறது. எதை கொடுக்கலாம் என பாஜக நினைக்கிறது. இந்த முறை பாஜக சார்பில் 25 எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம். வெட்கமும், மானமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான்.

18 கோடி தொண்டர்களை கொண்ட, ஜனநாயகத்தின் வழி நடக்கும் உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. பாஜக தனி மனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. கட்சியின் தொண்டர்களையும் சித்தாந்ததையும், மட்டுமே முன்னிலைப்படுத்தும். மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து அதற்கு புதிய பெயர் வைப்பதில் தி.மு.க., மிக சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. தமிழையும், தமிழர்களின் பெருமையையும் இவ்வுலகம் அறியச் செய்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. பாஜக எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது.

சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்? திராவிட மாடல் அரசு என கூறிக் கொண்டு குழப்பமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். தி.மு.க., எப்போதுமே தமிழுக்கும், தாழ் நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்பட்டு வந்துள்ளது. ஜே.பி.நட்டாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி தலை நிமிரச் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.