வேலூர்: வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 5 மாவட்டங்களில் 45 சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. இங்கு அரசு மூலம் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இதில் வேலூர் பதிவு மாவட்டத்தில், சாமுண்டேஸ்வரி, ரேணுகா, திருப்பத்தூர் பதிவு மாவட்டத்தில் ராமு, சங்கர், சதானந்தன், கோபால், வெங்கடேசன், ரவிச்சந்திரன், செய்யாறு பதிவு மாவட்டத்தில் பிச்சாண்டி, முருகன், திருவண்ணாமலை பதிவு மாவட்டத்தில் சண்முகம் என மொத்தம் 11 பத்திர எழுத்தர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் பதிவு மாவட்டத்தில் தேவன் என்ற பத்திரப்பதிவு எழுத்தரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. ராணிப்பேட்டை பதிவு மாவட்டத்தில் போலி ஆவணங்கள் பத்திரங்கள் பதிவு தொடர்பாக தணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
