தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பர்ஹான் பெஹர்டின், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான பர்ஹான் பெஹர்டின் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30.69 சராசரியில் 1074 ரன்கள் எடுத்தார். மேலும் 38 டி20 போட்டிகளில் விளையாடி 518 ரன்கள் எடுத்துள்ளார். 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த ஒய்வு முடிவு குறித்து பர்ஹான் பெஹர்டின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
கடந்த 18 வருடங்களில் ஒருநாள் கூட நான் வேலை செய்யவில்லை. கிரிக்கெட்டை ஆர்வத்துடன் விளையாடினேன். 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
ஆதரவை வழங்கிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. எனது வாழ்க்கையில் நான் சந்தித்த அனைத்து பயிற்சியாளர்கள் எனது சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
— Farhaan Behardien (@fudgie11) December 27, 2022