தளபதி விஜய்யும் செருப்பும் ஒன்னா?… சர்ச்சையை பற்ற வைத்த யூட்யூபர் TTF வாசன்

2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலம் என கூறப்படுபவர் டிடிஎஃப் வாசன். யூட்யூபரான இவர் கோவையை சேர்ந்தவர். தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவருக்கு 35 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.ஏராளமான யூட்யூபர்கள் இருந்தாலும் இவருக்கு 2k கிட்ஸில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா பிரபலத்துக்கு இணையாக இவரை காண கூட்டம் கூடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஹோட்டலில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு பலர் அங்கு கூடினர். 

எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அதே அளவு சர்ச்சையும் இவரை சுற்றி வட்டமிடுகிறது. இவர் மீது சில வழக்குகளும் போடப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துகிறார் என பலர் பேச, 90ஸ் கிட்ஸுக்கு வயதாகிவிட்டதால் அவர்களால் எங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள்தான் பழைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என 2K கிட்ஸ் பதிலளிக்கின்றனர்.

அதேசமயம், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் சமீபத்தில் பச்சைக் குத்திக்கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க வாசன் வாசமே அடித்தது.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் டிடிஎஃப் வாசன். அந்தப் பேட்டியின்போது நெறியாளர், “உங்கள் பிறந்தநாளுக்கு ஹோட்டல் ஒன்றில் பலர் கூடினர். அப்போது விஜய்க்கு போட்டியாக இவர் நடத்துகிறார். விஜய் போலவே செல்ஃபி போடுகிறார் என கூறப்பட்டதே என கேட்டதற்கு, “நான் எடுத்துக்கொண்ட செல்ஃபி அவ்வாறு மாறிவிட்டது” என்றார்.

அதனைத் தொடர்ந்து அப்போ விஜய்க்கு போட்டியாகத்தான் அப்படி எடுத்தீர்களா என நெறியாளர் கேள்வியை தொடர, அதற்கு பதிலளித்த வாசன், “டேய் இவன்லாம் இப்படியாடா இந்த செருப்பும் இந்த செருப்பும் ஒன்னாடானு கேட்டா? ஏன் ரெண்டு செருப்பும் ஒன்னாகக்கூடாதா?” என்று கூறினார்.

வாசனின் இந்த பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றுமே சாதிக்காத வாசன் எப்படி தன்னை விஜய்யோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம் என கேள்வி எழுப்பும் தளபதி ரசிகர்கள், ஒப்பிட்டதோடு மட்டுமின்றி விஜய்யை செருப்பு என்று கூறிவிட்டாரே என சமூக வலைதளங்களில் வாசனை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.