பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் கொரோனா வைரஸ்தொற் றை எதிர்கொள்ள 4ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட 2 கொள்கலன்கள்.முழுவதும் நிரப்பப்பட்ட 110 சிலிண்டர் கள் தயார்நிலையில் உள் ளது. மருத்துவமனை கண் காணிப்பாளர் டாக்டர் அர்ச் சுனன் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற் றின் 3வதுஅலை தற்போது வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு எச்சரிக்கை யின் காரணமாக, தமிழக அரசு அனைத்து மாவட்டங் களிலும் கொரோனா சிகி ச்சைக்கானஅனைத்து முன் னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வும், குறிப்பாக நோயாளிக்கு மிகமிக அத்தியாவசிய தேவையாகக் கருதப்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், மருந்து பொ ருகள் அனைத்தும் அரசுத் தலைமை மருத்துவ மனை களில் தயார்நிலையில் வைத்திருக்கவும் தேவை யான நடவடிக்கைகளை மே ற்கொள்ளவும் உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக நேற்று பெரம்பலூர் மாவ ட்ட அரசுத் தலைமை மருத் துவ மறையின் கண்காணி ப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் தெரிவித்ததாவது :
பெரம்பலூர்அரசு தலைமை மருத்துவமனையில் கொ ரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கான சிகி ச்சை குறித்து அவசர ஒத்தி கை நடத்தப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் தமிழ்நாடு மெடிக்கல் சப்ளைஸ் கார்ப்பரேசன் மூலம் பெறப்பட்ட 3ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட கொ ள்கலன் ஒன்றும், ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட கொள்கலன் ஒன்றும் பாதுகாப்பு வசதிகளுடன் தயார் நி லையில் உள்ளது.
கொள்கலனில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் அலாரம் அடிக்கும் திறன் கொண்டது. ஆக்ஸிஜன் இருப்பை அவ்வப்போது துல்லியமாகக் கண்டறியவும் முடியும். இந்த இரண்டு கொள்கலன்களும் மருத்துவ மனையில் உள்ள \”தாய் திட்ட\” அவசர சிகிச்சைப்பிரிவு மையம், ஒருங்கிணைந்த புற மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் தீவிர குழந்தைகள் சிகிச் சைப் பிரிவு ஆகியவற்றி லுள்ள மொத்தம் 240 படுக்கைகளுடன்.இணைக்கப் பட்டு வாரத்தின் அனைத்து நாட்களிவும், 24மணி நேரமும் ஆக்சிஸன் பெறும் வசதியுடன் உள்ளது.
இந்த 2 கொள்கலன்களில் திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போகும் முன்பாக, தஞ்சை யிலிருந்து திரவ ஆக்ஸி ஜன் கொண்டுவரப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. இவை தவிர அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்தில் 3 அறைகளில் தலா 20லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்ள ளவு கொண்ட, முழுவதும் நிரப்பப்பட்டுள்ள 110 ஆக் ஸிஜன் சிலிண்டர்கள் பெர ம்பலூர் மாவட்ட அரசுத் த லைமை மருத்துவமனை யில் கைவசம் தயார் நிலை யில் உள்ளது.
அதனால் கொரோனா தொற்று பாதி த்த நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் முன்பாக நம்பிக் கையுடன் அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்ந் து சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார். அப்போது முதல்வரின் விரிவான மரு த்துவ காப்பீட்டுத் திட்ட மரு த்துவர் டாக்டர் சிவராமன், மருந்து கிடங்கு அலுவலர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
கட்டாய முகக் கவசம்….
அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் தெரிவிக்கையில், தமிழக அரசு உ த்தரவுப்படி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டிச.27ஆம் தேதிமுதல் டாக் டர்கள், செவிலியர்கள், மரு ந்தாளுநர்கள், கொரோனா தொற்றுப் பரிசோதனை ஆ ய்வக ஒப்பந்தப் பணியாள ர்கள், நோயாளிகள், நோ யாளிகளின் உறவினர், பா து காவலர் அனைவரும் கட் டாயம் முகக்கவசம் அணி ந்திருக்க வேண்டும் என உ த்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பணி நீட்டிப்பு அவசியம்…
மேலும் கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் தெரிவி க்கையில், கடந்த 2020ம் ஆ ண்டு முதல் 3ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரி சோதனை ஆய்வக ஒப்பந் தப் பணியாளர்கள் பணிபு ரிந்து வருகின்றனர். இவர் களது பணிக்காலம் வருகி ற 31ஆம் தேதியுடன் முடிவ டைகிறது. அவர்களது சே வைதொடர்ந்து கிடைத்திட தமிழக அரசு அவர்களைத் தொடர்ந்து பணிபுரிய பரி சீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று சிகிச்சைக்கான இப்பணிகள் தொடர்ந்திட அவர்களது பணியை நீட்டிக்க செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.