சென்னை: பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டை காத்திட படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (டிச.28) காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.