பத்து வயதிற்கு உட்பட்ட இரு குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருந்ததால் பெற்றோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது
தற்போது சர்க்கரை நோய் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை தாக்கி வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் சேலத்தில் தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ததகாபட்டி பகுதியில் வசித்து வந்த மான்விழி யுவராஜ் என்ற தம்பதிகளுக்கு அக்ஷரா என்ற 5 வயது மகளும் நேகா என்ற 7 வயது மகளும் இருந்துள்ளார்கள். சமீபத்தில் மேற்க்கொண்ட பரிசோதனையில் ரேகா மற்றும் அக்ஷரா இருவருக்கும் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தம்பதிகள் மகள்கள் இருவரையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.