புத்தாண்டுக்கு பிரித்தானியா செல்லும் இளவரசர் ஹரி; அரச குடும்பத்தை பார்க்க அல்ல


இளவரசர் ஹரி புத்தாண்டுக்கு பிரித்தானிய செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அவர் தனது அரச குடும்பத்தாரை பார்ப்பதற்காக செல்லவில்லை, பதிலாக அரச குடும்பத்திற்கு எதிராக வெளிவரவுள்ள அவரது நினைவுக்குறிப்பு புத்தகத்தை விளம்பரப்படுத்த அவர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) ஜனவரி 10, 2023 அன்று வெளியியாகவுள்ளது.

புத்தாண்டுக்கு பிரித்தானியா செல்லும் இளவரசர் ஹரி; அரச குடும்பத்தை பார்க்க அல்ல | Prince Harry Return To Uk In New Year For Spare

டெய்லி மெயில் அறிக்கையின்படி , ஹரி புத்தாண்டில் இங்கிலாந்திற்குச் சென்று தனது புத்தகத்தை எழுதியதற்கான ‘நோக்கத்தை’ விளக்கி விளம்பரப்படுத்தவுள்ளார்.

இதற்கிடையில், அரச நிபுணரும் வாழ்க்கை வரலாற்றாசிரியருமான டாம் போவர், நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரி அரச குடும்பத்துடன் ஒரு உறவை ஏற்படுத்தும் அல்லது முற்றிலுமாக முறிந்துவிடும் தருணமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதேபோல். அரச நிபுணர்கள் பலர், Spare புத்தகத்தின் வெளியீடு நிச்சயம் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு எதிரானதாக மாறும் என்று கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.