திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் 14 வரையும் மற்றும் 28 தேதி தவிர்த்து மற்ற நாட்களுக்கு டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
