சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி மலைவாசஸ்தலங்களில் வசித்துவரும், நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5ஆண்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு […]
