ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை… நடிகர்களின் கல்வித் தகுதி தெரிந்துக்கொள்ளுங்கள்

Actor’s Qualifications: டாப் தமிழ் நடிகர்களின் கல்வித் தகுதி என்னவென்று தெரியுமா? அதுக்குறித்து விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களை கவர்ந்த நடிகரின் கல்வித் தகுதி என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பள்ளிப் படிப்பை ஆச்சார்யா பாடசாசாலையில் பயின்றார். பின்னர் 1973ல் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ படித்தார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன் உயர்நிலைப் பள்ளி வரை படித்துள்ளார்.

விஜய்
தளபதி விஜய் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் படித்தார்.  அவர் 65-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.

அஜீத்குமார்
1986 ஆம் ஆண்டு ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் உயர்நிலைப் படிப்பை முடிப்பதற்கு முன்பே
அஜீத் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். கார் மற்றும் பைக் பந்தயத்தில் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்ன இவருக்கு எராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

விக்ரம்
சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். சோலா டீ, டிவிஎஸ் எக்செல் மற்றும் ஆல்வின் வாட்ச்கள் உள்ளிட்ட பிராண்டுகளுக்கான விளம்பரப் படங்களில் மாடலிங் செய்துக்கொண்டு இருந்த விக்ரம், அதன்பிறகு திரைத்துரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார. 

தனுஷ்
மதுரை காமஜர் பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

சூர்யா
தேசிய விருது பெற்ற சூர்யா சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றுள்ளார்.

கார்த்தி சிவக்குமார்
கார்த்தி சிவக்குமார் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்துள்ளார்.

ஜெயம் ரவி
சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றார். பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனம் பயின்ற இவர், தனது 12வது வயதில் அரங்கேற்றம் செய்தார்.

சிவகார்த்திகேயன்
திருச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் B.Tech., MBA பட்டத்தை முடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.