மும்பை : நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்த வழக்கில், அவரது காதலன் ஷீசான் கான் மொபைலில் வாட்ஸ் ஆப் தடயங்களை அழித்ததாக கூறப்படுகிறது.
ஹிந்தி, ‘டிவி’ தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை துனிஷா சர்மா, 20. கடந்த 24ம் தேதி, மும்பையின் வாலிவ் என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பு இடைவேளையின் போது, துனிஷா ‘மேக்கப்’ அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரை காதலித்து வந்த நடிகர் ஷீசான் கான், திருமணம் செய்து கொள்ள மறுத்ததை அடுத்து துனிஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் வனிதா போலீசில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து ஷீசான் கான் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷீசான்கான், துனிஷா சர்மாவிற்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மேசெஸ் வீடியோ மற்றும் புகைபடங்களை அழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தடயங்களை அழித்த குற்றத்திற்காக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே துனிஷா சர்மாவின் தாயாரை இன்று போலீசார் மீண்டும் வரவழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதனை பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement