சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023ம் ஆண்டுக்கான உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர்.பி. தேர்வுகள் மூலம் 2023ம் ஆண்டில் சுமார் 15,149 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லுரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு நடத்த டி.ஆர்.பி திட்டமிடப்பட்டுள்ளது.
