
வாரிசு படத்தின் டிரைலர் எப்போது?
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகிறது. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்து வருவதோடு, சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அப்படத்தின் இசை விழாவும் பிரமாண்டமாய் நடைபெற்றது. வருகிற ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்பபுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஆங்கில புத்தாண்டு தினமான ஜன., 1ல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.