குளத்தூர்: காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் தம்பதி, ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை அடுத்த தருவைகுளம், அனைந்தமாடன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமுனியசாமி (27). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து சில மாதங்களில் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் பல்லாகுளம் அருகே துவரந்தை கிராமத்தைச் சேர்ந்த சீதாசெல்வியை (22) காதலித்து கடந்த அக்டோபர் 27ல் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
