சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வெங்கடேஸ்வரன் என்பவர் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ணாரி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போது மது அருந்திவிட்டு போதையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.தகவலின் பேரில் ஏட்டு வெங்கடேஸ்வரன் ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஈரோடு எஸ்பி சசி மோகன் மேற்கொண்ட விசாரணையில், பணியின்போது வெங்கடேஸ்வரன் மது போதையில் இருந்தது உறுதியானதால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
