திமுகவின் பி டீம் யார்? எடப்பாடியை கைகாட்டும் மருது அழகுராஜ்

ஓ.பன்னீர்செல்வம் தான் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கையை பெற்றவர் எனவும் அவர் தலைமையில் தான் அதிமுக கூட்டணி அமையும் எனவும் அவரது ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ், “அதிமுக தலைமை கழகத்தில் கூட்டம் கூட்டியதற்காக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் அல்ல. எடப்பாடி இல்லாத அதிமுகவை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சி பலன் அளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை விட்டு பலர் விலகும் முடிவை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது

ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகித்து அவரை அவமதித்து வருகிறார் ஜெயக்குமார்.

பாஜகவுக்கு எதிராக சிவி சண்முகத்தை பேச சொன்னவர்

தான். ஓ.பன்னீர்செல்வத்தை அரசியல் போலி என நத்தம் விஸ்வநாதன் சொல்வது உண்மை என்றால் அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வது போல தான். ஜெயலலிதாவை நீக்கியவர்கள் இப்போது அவரது நியமணங்களையும் இழித்து பேசுகின்றனர். யார் அரசியல் போலி என்ன என்பது பிரதமருக்கு கூட தெரியும். நத்தம் விஸ்வநாதன் மன நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேற்று வரை அண்ணன் என்று சொல்லி விட்டு இன்று போலி என்கிறார்.

இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடும் உரிமை இன்னமும் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் உள்ளது. பழனிச்சாமியால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தலைமை கழகம். அது சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி.

ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவர் தான் அவர். கூவத்தூரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி மேல் உள்ள நம்பிக்கையில் தான்

உள்ளது. அதிமுக பிளவால் திமுக தேர்தல்களில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை கண்ணால் பார்த்து சாட்சியான கிருஷ்ண பகதூரும் கொல்லப்பட்டு விட்டார் என்றே தெரிகிறது. இந்த வழக்கில் திமுகவின் பிடியின் எடப்பாடி சிக்கிக் கொண்டு திமுகவுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உதவுகிறார்.

ஓ.பி.எஸ்.ஸை திமுகவின் பி டீம் என சொல்கின்றனர். உண்மையில் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் தான் திமுகவின் உண்மையான பி டீம்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் கூட்டணி அமையும். அவர்தான் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கைக்கு உரியவர். டி.டி.வி தினகரன் பிளவால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது. இப்போது அதிகமான பிளவுகள் உள்ளதால் தேர்தலில் அதிமுக தோற்கும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி பாதிப்பை உணர்வார்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.