வடக்கு ரயில் இருக்கை முன்பதிவு நேரங்களில் மாற்றம்

வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் காரணமாக, வடக்கு ரயில் பயண சீட்டு மற்றும் இருக்கை முன்பதிவு நேரம் ஆகியவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெகுஜன ஊடக .,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,

இதுதொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் (வணிகம்) வி.எஸ். பொல்வத்தகே மேலும் தெரிவிக்கையில் ,வடக்கு புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ,ரயில் பயணிகள் தமது பயணத்தை தடங்கலின்றி தொடருவதற்கு வசதியாக குறுகிய கால விடங்களில் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் வடமாகாண ஆளுநர் மற்றும் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றோம் இதன்விளைவாக தகவல் மத்திய நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மத்திய நிலையத்தின் மூலம் பயணிகளால் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் ஆசன பதிவு செய்யப்பட்ட ரயிலுக்கான பயணிகளின் எண்ணிக்கையை அறிந்து அந்த எண்ணிக்கைக்கு அமைவாக பயணத்தை தொடருதவதற்கான பஸ்களையும் திணைக்களம்  ஏற்பாடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ரயில் இருக்கை முன்பதிவு இரண்டுவாரங்களுக்கு வரையறுக்கப்படும் என்றும் முகாமையாளர் (வணிகம்) வி.எஸ். பொல்வத்தகே கூறினார்.

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை முதல் வகுப்பு First Class இருக்கை முன்பதிவு  ரயில் கட்டணம்    ரூ.2,400/= இரண்டாம் வகுப்புக்கு ரூ.1,700/=  மற்றும் மூன்றாம் வகுப்புக்கு ரூ.1200.= அறவிடப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.