மத்தியப் பிரதேச முதல்வர் புதுச்சேரியில் ஓய்வு| Madhya Pradesh Chief Minister rests in Puducherry

புதுச்சேரி : ஓய்வெடுக்க குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகானை சபாநாயகர் செல்வம் வரவேற்றார்.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஷிவ்ராஜ்சிங் சவுகான் உள்ளார். அவர் குடும்பத்துடன் தனி விமானம் மூலம் நேற்று மாலை 3:50 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பூரணாங்குப்பம் சரோவர் லகூன் தனியார் விடுதியில் தங்கிய அவரை சபாநாயகர் செல்வம், அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான் நாளை 30 ம் தேதி வரை புதுச்சேரியில் ஓய்வெடுக்கிறார். அப்போது அவர் சிதம்பரம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்ல உள்ளார். வரும் 31ம் தேதி புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மத்திய பிரதேசம் புறப்பட்டு செல்கிறார்.

மத்தியப் பிரதேச முதல்வர் வருகையை முன்னிட்டு பூரணாங்குப்பம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.