அரச நிறுவனங்கள் இலங்கை மின்சார சபைக்கு 250 கோடி ரூபா கடன்


அரச நிறுவனங்கள், இலங்கை மின்சாரசபைக்கு 250 கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரக் கட்டணங்களே இந்த கடன் தொகையாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டண நிலுவைகள்

வைத்தியசாலைகள், கல்வி நிறுவனங்கள், இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் போன்ற அரசாங்க நிறுவனங்களே அதிகளவில் மின்சாரக் கட்டண நிலுவைகளைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் இலங்கை மின்சார சபைக்கு 250 கோடி ரூபா கடன் | 250 Crores Loan To Sri Lanka Electricity Board

இந்த நிறுவனங்களிடமிருந்து கட்டணங்களை அறவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களை செலுத்தாத போதிலும் அரச நிறுவனங்கள் என்ற காரணத்தினால் அவற்றின் மின் இணைப்பினை துண்டிக்கக் கூடிய சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.