புதுச்சேரி : கழிவுநீரை ஏற்றி செல்லும் வாகனங்கள் உரிமம் பெறாமல் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வில்லியனுார் கொம்யயூன் ஆணையர் ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாத்திற்குட்பட்ட பகுதியில் கழிவுநீரை வாகனங்களில் எடுத்து சென்று வெளியில் விடுகின்றனர். கழிவுநீர் எடுத்து செல்லும் வாகன உரிமையாளர் கொம்யூனில் உரிமம் பெற்று இயக்க வேண்டும். கழிவுநீர்களை விளைநிலங்கள், வாய்க்கால் மற்றும் பொது இடங்களில் விடக்கூடாது. அப்படி மீறி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement