மூன்று முறை உலகக்கோப்பை வெற்றியாளர்! கால்பந்தாட்ட ஜாம்பவானின் உடல்நிலை மேலும் மோசம்


மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே, மருத்துவமனையில் அனுமஹிக்கப்பட்டு ஒரு மாதமாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினர் சோகம்

82 வயதான பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே (Pele) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கியுள்ளதால், அவரும் அவரது குடும்பத்தினரும் சோகத்துடனும் விரக்தியுடனும் இருப்பதாக பீலேவின் மகள்களில் ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

பீலேவின் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் அவர் “சிறுநீரக மற்றும் இதய செயலிழப்பு” தொடர்பான “உயர்ந்த கவனிப்பில்” இருப்பதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறினர்.

மூன்று முறை உலகக்கோப்பை வெற்றியாளர்! கால்பந்தாட்ட ஜாம்பவானின் உடல்நிலை மேலும் மோசம் | Three Time World Cup Winner Pele Hospital Critical

இதையடுத்து, பீலே நவம்பர் 29 அன்று சாவ் பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரத்தில் மருத்துவமனை எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

அவர் மோசமான நிலையில் இருப்பதால், மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையில் உள்ளனர்.

பீலேவின் மகன்

பீலேவின் மகன்களில் ஒருவரான எடின்ஹோ என்று அழைக்கப்படும் எட்சன் சோல்பி நாசிமெண்டோ, சனிக்கிழமையன்று அவரை பார்க்க வந்தார். கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றம் அவர், செவ்வாயன்று தெற்கு பிரேசில் நகரத்திற்கு திரும்பினார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு தனது தந்தை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பீலே எனும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ

உலகளவில் பீலே என்று அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோவுக்கு (Edson Arantes do Nascimento), செப்டம்பர் 2021-ல் பெருங்குடல் கட்டி அகற்றப்பட்டது. அது மற்ற உறுப்புகளுக்கு பரவியதா என்பதை அவரது குடும்பத்தினரோ அல்லது மருத்துவமனையோ குறிப்பிடவில்லை.

1958, 1962 மற்றும் 1970 உலகக் கோப்பைகளில் பிரேசிலை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பீலே, 77 கோல்கள் அடித்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். சமீபத்திய உலகக் கோப்பையின் போது பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார்.

மூன்று முறை உலகக்கோப்பை வெற்றியாளர்! கால்பந்தாட்ட ஜாம்பவானின் உடல்நிலை மேலும் மோசம் | Three Time World Cup Winner Pele Hospital CriticalImago

அர்ஜென்டினா வென்ற கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை கல்ப்பந்தாட்ட போட்டியின் போது, ஜாம்பவான் பீலேவுக்கு பல அஞ்சலிகளும் விரைவில் குணமடைய வாழ்த்துகளும் குவிந்தன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.