வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தை சேர்ந்த விதவை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில், மார்பகம் தனியாக அறுத்தெடுக்கப்பட்டும், தோல் உரிக்கப்பட்ட கொடூரமும் நடந்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவர் தான், பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு தேர்வான ஹிந்து எம்.பி., ஆவார்.

அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஷின்ஜோரா கிராமத்தை சேர்ந்தவர் தயா பெல்(40). விதவையான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரை படுகொலை செய்த காட்டுமிராண்டிகள், அவரது உடலில் இருந்து தலையை துண்டித்ததுடன், மார்பகத்தையும் அறுத்தெடுத்தனர்.

தலையில் இருந்து சதையையும் அகற்றினர். உடல் மோசமான நிலையில் தான் கிடைத்துள்ளது. முகம் மற்றும் உடலில் இருந்து, தோலும் உரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தேன்.

போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கிருஷ்ண குமாரி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement