இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் | Department Of Immigration Emigration

விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.