Income Tax: 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி விலக்கு! அரசு செய்யவிருக்கும் பெரிய மாற்றம்

வருமான வரி ஸ்லாப்: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. நீங்கள் அதிக வருமான வரி செலுத்துவதால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது. இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது வரம்பு 2.5 லட்சமாக உள்ளது

தற்போது உள்ள விதிகளின் படி, ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த  வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, உங்கள் ஆண்டு வருமானமும் ரூ.5 லட்சம் வரை இருந்தால், நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

கடைசி மாற்றம் 2014 இல் ஏற்பட்டது

இந்த பட்ஜெட் மத்திய அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும். இது நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். இதன்பிறகு, 2024-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு நடுத்தர மக்களுக்கு அரசு பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2014ம் ஆண்டு தனிநபர் வரி விலக்கு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது.

அருண் ஜெட்லி வரம்பை உயர்த்தினார்

முன்னதாக, இந்த வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்துவதாக அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இந்த நிலையில், இம்முறை இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டுகள் பழமையான வரி முறை மாறும்

2 ஆண்டுகள் பழமையான வரி முறையில் வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், இதன் மூலம் முதலீட்டிற்கும் அதிக பணம் கிடைக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.