'அங்க ஐட்டம் சாங் தான்…' பாலிவுட்டில் தென்னிந்திய மானத்தை கப்பலேற்றிய ராஷ்மிகா – வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Rashmika Mandanna Controversy : நடிகை ராஷ்மிகாவுக்கு சமூக ஊடகங்களில் ரசிக பரப்பு என்பது மிக அதிகமானது. ராஷ்மிகாவின் டான்ஸ் மூவ்விற்கும், கியூட் எக்ஸ்பிரஷனுக்கும் அடிமைகளாக பல நெட்டிசன்கள் உள்ளனர். இதனால், National Crush of India என்ற அளவில் ராஷ்மிகாவை இணைய சமூகம் கொண்டாடியது. ஆனால் மறுபுறம் அவரை கலாய்க்கவும் ஒரு கூட்டம் தயாராகவே இருந்தது.  ரசிகர் கூட்டம் கொண்டாடும் அனைத்தையும், இந்த எதிர்ப்பு கூட்டம் சேர்த்துவைத்து வருத்தெடுக்கும்

எனவே நடிகை ராஷ்மிகா எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்கும் நடிகைகளுள் ஒருவராக மாறிப்போனார். தெலுங்கில் படு பிசியாக இருந்த அவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார். வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ட

அதுமட்டுமில்லாமல், பாலிவுட்டில் முதல் முறையாக நடித்த ‘மிஷன் மஞ்சு’ என்ற படம் வரும் ஜன. 19ஆம் தேதி நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் வாரிசு படத்தின் பிரமோஷனிலும், தெலுங்கில் மிஷன் மஞ்சு படத்தின் பிரமோஷனிலும் ராஷ்மிகா ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் நடந்த மிஷன் மஞ்சு பாடல் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகாவின் பேச்சு தற்போது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. “நான் பாலிவுட் பாடல்களை அதிகமாக கேட்பேன். பல ஆண்டுகளாக பாலிவுட் பாடல்கள்தான் பெரும் தாக்கத்தை அளித்தது” என்றார். பேசிக்கொண்ட சென்ற அவர், பாலிவுட் பாடல்கள் மிகவும் ரொமான்டிக்கானது. தென்னிந்தியாவில் குத்துப்பாடல், மாஸ் பாடல், ஐட்டம் சாங்ஸ் அனைத்தும் இருக்கும்…ஆனால்” என்று அவர் பேசும் வீடியோ வைரலானது. 

ஆனால், அவர் பேச்சுவாக்கில் கூறியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேசுவதை முடிக்கும் முன்பே அந்த நிகழ்வின் தொகுப்பாளர், தென்னிந்தியாவில் அந்த மாதிரி பாடல்கள்தான் அதிகம் என்பது தெரிந்ததுதானே” என்ற சிரித்தவாரே கூறினார். தொகுப்பாளரின் அந்த பகடிக்கு ராஷ்மிகாவின் கருத்துதான் வழிவிட்டது என்ற ரீதியில் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். 

ஏன் தென்னிந்தியாவில் மட்டும்தான் அதுபோன்ற பாடல்கள் இருக்கிறதா, அதுபோன்ற பாடல்களை அதிகம் வைப்பதே பாலிவுட்தான் என தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்றும் போகிற போக்கில் குற்றச்சாட்டை அள்ளி வீசி வருகின்றனர். 

இருப்பினும் ஒருபக்கம், ராஷ்மிகாவின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என ரசிகர்கள் சமாளித்து வரும் நிலையில், ரசிகர்களின் எதிர்தரப்பினர் ஈவு இரக்கம் இன்றி ராஷ்மிகாவை கலாய்த்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.