ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமுவை படிக்கும்போதே எனக்கு தெரியும் – சீமான்

புதுக்கோட்டையில் அரங்கேறிய தீண்டாமை சம்பவங்கள் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர்த்தேக்கத் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மனித கழிவை கலந்துள்ளனர். அதனை பருகிய குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பல ஆண்டுகளாக பறிக்கப்பட்டு இருந்த பட்டியலின மக்களின் உரிமையை மீட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் காவல்துறை உதவியோடு தீண்டாமை செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கவிதா ராமுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும், கலெக்டர் கவிதா ராமு மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இருவரும் இணைந்து பட்டியில் இன மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது. இந்து கோயில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சீமான் ஒன்றை குறிப்பிட்டிருந்ததை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

சீமான் தனது அறிக்கையில் ” சகோதரி கவிதா ராமுவை படிக்கின்ற காலத்திலிருந்து நான் அறிவேன். தமது அறிவையும், ஆற்றலையும், அதிகாரமிக்க பதவியையும் எப்போதும் எளிய மக்களின் நல்வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் அவருடைய அர்ப்பணிப்புமிக்க உழைப்பென்பது மிகுந்த போற்றுதலுக்குரியது” என குறிப்பிட்டிருந்தார். கவிதா ராமுவை படிக்கின்ற காலத்திலிருந்து நான் அறிவேன் என்று சீமான் கூறியதை ஆமைக்கறி உள்ளிட்ட விவகாரங்களை தொடர்புபடுத்தி மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.

புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு 2014ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். மதுரையை சேர்ந்த இவர் 4 வயதில் இருந்தே பரதநாட்டியம் கற்று வந்தவர். தற்போது மிக சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் உள்ளார். சிறுவயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் கொண்ட கவிதா ராமு 12ஆம் வகுப்பில் 93.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தனது தந்தையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் அவரால் ஈர்க்கப்பட்டு ஐஏஎஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.