நாட்டை சிறந்ததொரு நிலைக்கு கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் தெரிவிப்பு
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவினால் எழுதப்பட்ட “பல ரங்கனய” நூல் வெளியீட்டு நிகழ்வில் (டிசம்பர் 29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்தார்.
இந்த நேரத்தில் நாட்டைப் பற்றி யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். புதிய தலைமுறையினரின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது அவசியம். அவர்கள் சொல்வது போல் வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும். இந்நூல் தற்போதைய சமூகம், ஆட்சிமுறை, மனித நற்பண்புகளின் வீழ்ச்சி மற்றும் கடந்த காலங்களில் மாணவர் இயக்கங்கள் எதிர்கொண்ட நிலைமைகள் பற்றி பேசுகிறது.
நாடு மீளக் கட்டியெழுப்பப்படும் போது, அதை விரும்பாத பல தீவிரவாதிகளுக்கு அது வலியை ஏற்படுத்தும். எத்தகைய தடைகள் வந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். மக்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாகும். வன்முறை தற்காலிகமானது. மக்கள் ஒவ்வொரு முறையும் அதனை நிராகரித்தே வந்திருக்கின்றார்கள்.
வன்முறையிலிருந்து விலகி ஜனநாயகத்திற்கும் கலந்துரையாடலுக்கும் முன்னுரிமை அளித்து செயற்படும் நிலை சமூகத்தில் உருவாகியுள்ளது. இந்நூலின் பயனுள்ள விடயங்களை வெற்றிபெறச்செய்ய ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரினால் அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டதுடன், சங்கைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு