சென்னை: மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மழலையாய் பிறந்த மகனை…பிறர் மலைப்புற வளர்த்து… உறுதியான மலை என பொது வாழ்க்கையில் உயரச் செய்து… உலகிலேயே உயர்ந்த மனிதராய் உயர்த்தி தன் தள்ளாத வயதிலும்… தளர்வில்லா வலிமையை… உலகின் வலிய தலைவராம்… நம் பிரதமருக்கு… தற்போது மட்டுமல்ல பிறந்ததிலிருந்து… அளித்து வந்த அன்னை தீபம் அணைந்து விட்டது எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம் எதையும் தாங்கும் எப்போதும் உள்ள உறுதியை இப்போதும் நம் இறைவன் நம் பிரதமருக்கு அருளட்டும்…” என்று அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.