பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளி கழக வன்னிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கல்வி நிறுவனம் சார்பில் மாணவிகள், பெண் ஆசிரியர்கள், பெண் விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு தினமும் தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு அவசரகால தொடர்பு எண் வழங்க வேண்டும் என பள்ளி கழக வன்னிய குழு தெரிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் பெண்கள் தங்கும் விடுதி வளாகத்தை சுற்றி மதில் சுவர் அமைத்து வெளி ஆட்கள் நுழையாத கண்காணித்து தடுக்க வேண்டும்.
அதே போன்று வகுப்பறைகள், பூங்காக்கள், விடுதிகள்* வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் இருள் சூழாத வண்ணம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பெண்கள் நடமாடம் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மேலும் 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறைகளை ஏற்படுத்தி மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கழக வன்னிய குழு பரிந்துரை வழங்கியுள்ளது.