புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தலைநகர் டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க சுமார் 17,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் தனது டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு என்பது போடப்பட உள்ளது.
சுமார் ஆயிரம் போக்குவரத்து காவல்துறையினரும் 2500 பெண் காவலர்களும் மொத்தம் சுமார் 17,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக நகர் முழுவதும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுப் அவர்களை தடுப்பதற்காக 185 இடங்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தமாக125 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
image
போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது டெல்லியின் பிரதான இடங்களான கனாட் பிளேஸ் இந்தியா கேட் ஆகிய எட்டு மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரவு எட்டு மணி முதல் நள்ளிரவு வரை 1200 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளது இவை தவிர சுமார் 2000 மோட்டார் சைக்கிள்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் போதைப்பொருட்கள் புழங்குவதை தடுப்பதற்காக தனியாக டெல்லியில் நெல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.