சென்னை: கால்பந்து விளையாட்டு வீரர் பீலே மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டு வீரர் பீலே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பீலே – கால்பந்தாட்டத்தின் அரசராக மட்டுமல்ல, பல கோடிப் பேருக்கு ஊக்கமாக அமைந்து இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற தாக்கத்தைச் செலுத்திய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் ஆவார். கருப்பு முத்து என்று புகழப்பட்ட பீலே என்றென்றும் கால்பந்தின் அடையாளமாக அனைத்து வகையிலும் திகழ்வார். யாராலும் மறக்கவொண்ணாத ஒரு பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.” இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.