உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் பிரேசில் கால்பந்து வீரர் பீலே காலமானார்.
பிரேசில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது வயது 82வது வயதில் உயிரிழந்துள்ளார்.
எடிசன் நஷ்டிமென்டோ என்ற இயற்பெயரை கொண்ட அவர், கால்பந்து களத்தில் பீலே என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இயேசு சிலைக்கு நிகராக பிரேசிலின் அடையாளமாக திகழ்ந்த பீலே, இந்த உலகை விட்டு மறைந்தது கால்பந்து உலகின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.