ஆந்திரா: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கீழ் திருப்பதி – திருமலை இடையே 1,769 முறை பேருந்து சேவைகளை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது கீழ் திருப்பதி – திருமலை இடையே தினமும் 1,100 முறை பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா திருமலை திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாளை இரவு முதல் ஜனவரி 11 வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட்டில் உள்ள குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கும் வகையில் கீழ் திருப்பதியில் இருந்து திருமலை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகத்தில் இருந்து மேலும் 25 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.