பெண்களை மையப்படுத்தும் படங்களின் வெற்றி தோல்வியில் ஹீரோயின்களுக்கு பங்கு உண்டு : த்ரிஷா

த்ரிஷா நடித்துள்ள ராங்கி படம் இன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த படத்தில் நான் நிருபராக நடித்திருக்கிறேன். கதைப்படி எனது அண்ணன் மகள் கடத்தப்படுகிறாள். அவளைத் தேடி செல்லும் நான் ஒரு சர்வதேச பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறேன். அதில் இருந்து நானும் வெளியேறி, அண்ணன் மகளையும் எப்படி காப்பாற்றுகிறேன் என்பதுதான் படத்தின் கதை. இந்த கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார். எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி உள்ளார். இவர்களுக்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம். இதுபோன்ற படங்களில் நடிக்க பயமாக இருக்கிறது. காரணம் படத்தின் வெற்றி தோல்வி என்னையும் பாதிக்கும், ஹீரோக்களின் படத்தில் நடித்தால் வெற்றி தோல்வியை ஹீரோவும், இயக்குனரும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த படத்தில் நான் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். அதற்காக வொண்டர் உமன் பட ரேன்ஞ்சிற்கு கற்பனை செய்யாதீர்கள் இயல்பாக எப்படி முடியுமோ அப்படி செய்திருக்கிறேன்.

விஜய், அஜித் ஜோடியாக நடிப்பதாக நானும் சோஷியல் மீடியாக்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன். நான் நடிப்பதாக இருந்தால் சம்பந்தபட்டவர்கள் அதனை முறைப்படி அறிவிப்பார்கள். நானே அதை சொல்ல முடியாது. நாளை நடப்பதை யார் அறிவார். என்கிறார் த்ரிஷா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.