தமிழ் அரசியல்வாதிகள் தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்: விஜயதாஸ ராஜபக்ச


“தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்துவிட்டு தமிழ்
மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும், அரசியல் தீர்வைக்
காண்பதற்கான பயணத்தில் ஜனாதிபதியுடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்” என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு
அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசரப்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டுவர
முயலவில்லை. தேசிய இனப்பிரச்சினையால் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடாது
என்பதைக் கருத்திற்கொண்டே அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் அவர்
இறங்கியுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்: விஜயதாஸ ராஜபக்ச | A Political Solution For The Tamil People Ranil

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக்
களைந்துவிட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் ஜனாதிபதியுடன் அவர்கள் கைகோர்க்க
வேண்டும்.

நல்லிணக்கம் தொடர்பான பல நிறுவனங்கள் எனது அமைச்சின் கீழ் உள்ளன. அந்த
நிறுவனங்கள் தங்கள் பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கின்றன” என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.