நாடளாவிய ரீதியில் இன்று(31)ம் நாளை (01) யும் மின்சாரத்துண்டிப்பு இடம் பெறாது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் நாளந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் என்ற காலப்பகுதிக்கு மின்சாரத்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரமளித்துள்ளது.
இதற்கமைய பகல் நேரத்தில் ஒருமணித்தியாலமும், இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் என்ற அடிப்படையில் மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.