மக்களை மட்டுமின்றி மண்ணையும் காத்து விவசாயிகள் நலனை பேணும் திமுக அரசு!

தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு பல துறைகளிலும் செய்து வரும் நன்மைகளும், சாதனைகளும் அளப்பரியது.  கல்வி, தொழில்துறை, மருத்துவம் என பல துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி வரும் திமுக அரசு ஊருக்கே சோறு போடும் விவசாயிகளின் நலனில் மட்டும் அக்கறை செலுத்தாமல் போய்விடுமா என்ன? விவசாயிகளின் நலனிலும் திமுக அரசு அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.  2021-2022 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து தமிழக விவசாயிகளுக்கும் அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளது.  கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வரும் நிலையில் இதனை மீட்டெடுத்து விவசாயிகளின் நலனை காத்திட திமுக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது.  விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி அரசு சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல் போன்ற பல உதவிகளை செய்கிறது.  

இதன் வாயிலாக கரும்பு உற்பத்தி  2020-21 அரவைப் பருவத்தில் 95,000 ஹெக்டராக இருந்த நிலையில், 2022-23 அரவைப் பருவத்தில் 1,40,000 ஹெக்டராகவும் உயர்ந்துள்ளது.  மேலும் கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.  கரும்பு விவசாயிகளின் நலனை காக்க அரசு கிட்டத்தட்ட ரூ.199 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது மற்றும் கரும்பு வழங்கிய சிறப்பான விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 வழங்கவும் திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இதன் மூலம் ரூ.1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு கூறியுள்ளது.  அடுத்ததாக திமுக அரசு விவசாயிகளுக்கு மின்சார இணைப்பையும் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்க வழிவகை செய்துள்ளது.  பெய்யும் மழையில் மண் குளிர்வது போல, மண்ணையே நம்பி வாழும் விவசாயிகளின் மனதை குளிர செய்யும் வகையில் திமுக அரசு தோராயமாக 50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கி மாபெரும் நன்மையை செய்துள்ளது.  கடந்த நவம்பர் மாத 11ம் தேதி அரவக்குறிச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை செயல்படுத்தினார், இதில் முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.  அதற்கு முன்னர் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு அரசு மின் இணைப்புகளை வழங்கி நாட்டிலேயே அதிகளவு மின் இணைப்புகளை வழங்கிய அரசாக திகழ்கிறது.

 

பல அரசுகளும் அதன் ஆட்சிக்காலம் முடியும் சமயத்தில் சில நலத்திட்டங்களை செய்வது போல் காண்பிக்கும் ஆனால் திமுக அரசோ பதிவி ஏற்ற சில மாத காலங்களிலேயே சுமார் 1,50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பி வழங்கி விவசாய துறையில் மிகப்பெரும் சாதனையை செய்துள்ளது.  திராவிட மாடல் ஆட்சி தமிழக  நலனை மேம்படுத்த படிப்படியாக தமிழகத்தில் நிலையில்லாமல் தனது சாதனையை அரங்கேற்றி கொண்டே வருகிறது.  புதிய சூரிய மின்சக்தி மின் கட்டமைப்புடன், 1,528 மெகாவாட் இணைக்கப்பட்டு இந்திய அளவில் சூரியஒளி மின் உற்பத்தியில் தமிழகத்தை நான்காவது இடத்தில் கொண்டு வந்து திமுக அரசு நிறுத்தியுள்ளது.  இயற்கை பேரிடர்கள் போன்ற எல்லாவிதமான இக்கட்டான சூழலிலும், தன்னலமற்று, பொதுநலம் கருதி மக்களுக்காக அரும்பாடுப்பட்டு திமுக அரசு பல அரிய செயல்களை செய்து அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

விவசாயத்துறையில், விவசாயிகளின் நலனிலும் திமுக அரசு இன்னும் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது.  கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து இதுவரை 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை விவசாயம் பெருக திமுக அரசு பெரும் உதவி செய்துள்ளது.  பொதுவாக ஒரு நாட்டில் விவசாயம் செழித்தாலே அனைத்து துறைகளும் செழிப்பாகிவிடும், விவசாயத்தின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளத்தை காட்டுகிறது.  விவசாயத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இத்தகைய வளர்ச்சியை வைத்தே திமுக அரசு தமிழ்நாட்டை எவ்வளவு பெரிய உயரத்தில் வைத்திருக்கிறது என்பதை கணிக்க முடிகிறது.  டெல்டா பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் நீர் வரத்தும் அதிகமாக இருக்கிறது, எனவே மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாகாமல் பாசனத்திற்கு செல்லும் வகையில் பாலத்தை சீரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகளை அரசு செய்துள்ளது. திமுக அரசு சுமார் ரூ.80 கோடி செலவில் காவிரி, வெண்ணாறு, கல்லணை ஆகிய கால்வாய்களில் துார்வாரும் பணிகள், தடுப்பணை கட்டுதல், கரைகளை பலப்படுத்துதல், பாலங்கள் கட்டுமானப் பணிகள் போன்றவற்றை மும்முரமாக செய்து வருகிறது.  திமுக அரசின் முக்கியமான கொள்கை தமிழக மக்களின் நலனை மேம்படுத்துவதாகும், அதிலும் குறிப்பாக விவசாயிகளின் நலனில் பெரிதளவு கவனம் செலுத்துகிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.